டெல்லி: நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 72 சதவிகித  கழிவறைகளில் தண்ணீர் கிடையாது என்று, மத்திய தணிக்கைத் துறையான சிஏஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது மத்திய மாநில அரசுகளின் மெத்தனப்போக்கை தோலூரித்து காட்டியுள்ளது.

மத்திய தணிக்கை துறை ஆண்டுதோறும், அரசு துறைகள் குறித்துஆய்வு மற்றும் தணிக்கை  செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று (புதன்கிழமை) பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில்  பள்ளிகள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது.

அதில்,  நாடு முழுவதும், அரசு பொதுத்துறை நிறுவனங்களால் கட்டப்பட்ட பள்ளி கழிப்பறைகளில் 72% தண்ணீர் இல்லை என்று குற்றம் சாட்டி உள்ளது.

75% பள்ளிகளில்,  கழிப்பறைகள் சுகாதாரமாக பராமரிக்கப்படவில்லை என்றும் கூறி உள்ளது.

72%  மாணாக்கர்களுக்கு தேவையான தண்ணீர் கழிவறைகளில் இல்லை, என்றும், ,

30%  அளவிலான கழிவறைகள்,  சேதங்கள் மற்றும் பிற காரணங்களால் பயன்பாட்டில் இல்லை என்றும் தெரிவித்து உள்ளது.

இந்த ஆய்வுக்காக   தணிக்கையாளர் 2,695 கழிப்பறைகளை எடுத்திருந்ததாகவும்,  1,812 இல் முறையான பராமரிப்பு / சுகாதாரம் கிடைக்கவில்லை என்பதை தணிக்கை கவனித்தது என்று, இது மாநில அரசு மற்றும் பள்ளி நிர்வாகம்  – தலைமை ஆசிரியர்களின் பொறுப்பின்மை என்றும் கூறி உள்ளது.

பொதுத்துறை நிறுவனங்கள் கட்டி கொடுத்த கழிவறைகள், அடுத்த 3 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் இலவசமாக பராமரிக்கவும், வருடாந்திர செலவுகள் குறித்தும் அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவ்வாறு பராமரிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டி உள்ளது.

ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு,  பல அரசுப் பள்ளிகளில் சிறுவர் சிறுமிகளுக்கான தனி கழிப்பறைகள் கிடைக்காததால், ஒரு வருடத்திற்குள் 1.40 லட்சத்துக்கும் மேற்பட்ட கழிப்பறைகளை அமைக்குமாறு  கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும், ஆனால்,  இந்த திட்டத்தில் பங்கேற்று 1,30,703 கழிப்பறைகளை ரூ .2,162 கோடி செலவில் கட்டி இருப்பதாக தெரிவித்து உள்ளது.