ஏ.டி.எம்.ல் பணம் எடுக்க ரூ.25 கட்டணம்!! எஸ்.பி.ஐ மறுப்பு

டெல்லி:

‘‘ஏ.டி.எம்.ல் பணம் எடுத்தால் கட்டணம் என்ற தகவல் உண்மை இல்லை’’ -என்று எஸ்.பி.ஐ விளக்கம் அளித்துள்ளது.


இது குறித்து எஸ்.பி.ஐ ஒரு செய்திகுறிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், ‘‘எஸ்.பி.ஐ ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல் உண்மை இல்லை. ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பது குறித்து ஏற்கெனவே உள்ள நடைமுறையே தொடரும்.

‘இ வாலெட்‘ மூலம் ஏ.டி.எம்.ல் பணம் எடுக்கும் முறையை எஸ்.பி.ஐ அறிமுகம் செய்யவுள்ளது. ‘இ வாலெட்‘ மூலம் ஏ.டி.எம்.ல் பணம் எடுத்தால் மட்டுமே ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த செய்திகுறிப்பில், ‘‘வாலட் கணக்கில் வங்கி ஏஜென்ட் மூலம் பணம் போடவும், எடுக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆயிரம் ரூபாய் வரை டெபாசிட் செய்தால் 0.25 சதவீதம் சேவை கட்டணமும், சேவை வரியும் பிடித்தம் செய்யப்படும். இந்த நடைமுறை ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.