டெல்லி:

65 பொதுத் துறை நிறுவனங்களில் ஒரு பெண் இயக்குனர் கூட நியமிக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் அர்ஜூ0 ராம் மெக்வால் லோக்சபாவில் தெரிவித்துள்ளார்.

செபி மற்றும் 2013ம் ஆண்டு கம்பெனிகள் சட்டப்படி பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து நிறுவனங்களும் கண்டிப்பாக குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குனரை நியமனம் செய்ய வேண்டும் என்று கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரலில் உத்தரவிடப்பட்டது.

இயக்குனர்கள் மத்தியில் பாலியில் வேறுபாட்டை தவிர்க்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆயிரத்து 355 நிறுவனங்கள் பெண் இயக்குனர்கள் இல்லாமல் செயல்பட்டு வருகிறது என் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பட்டியலில் இடம்பெறாத 292 நிறுவனங்களும் பெண் இயக்குனர்கள் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. 65 பொதுத் துறை நிறுவனங்களிலும் பெண் இயக்குனர்கள் இல்லை என்று மத்திய கம்பெனிகள் விவகாரத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,‘‘ இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கம்பெனி பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுத் துறை நிறுவனங்களில் துறை சார்ந்த அமைச்சகங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

நாட்டில் மொத்தம் 4 ஆயிரத்து 558 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மேலும், ஆயிரத்து 9 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெறாமல் உள்ளன. மேலும், 134 பொதுத் துறை நிறுவனங்களில் பெண்களுக்கு இயக்குனர் பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளது.