திண்டுக்கல்:

திகமான மக்கள் படித்ததால்தான்  வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். அமைச்சரின் பேச்சு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அமைச்சர்களில்  பலர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவது வாடிக்கையாகி வருகிறது. அவர்கள் அறிந்துதான் பேசுகிறார்களா? அல்லது தங்களது திறமையே இதுதான் என்று, அதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறார்களோ என்பது  தெரியவில்லை. தமிழக அரசையும், அமைச்சர்களின் செயல்பாடுகளையும் சமூக வலைதளங்களில் அனைத்து தரப்பினரும் கடுமை யாக விமர்சித்து வரும் நிலையிலும், தமிழக அமைச்சர்களின் அறியாமை மீண்டும் மீண்டும் வெளிப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திண்டுக்கல் செட்டிநாயக்கன் பட்டியில் முதல்வரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நலதிட்ட உதவிகள் வழங்கி பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,  எம்.எல்.ஏ, எம்.பி, மந்திரிகள், மாவட்ட ஆட்சியரிடம் அப்போதெல்லாம் மகன், மகள் பெரிய படிப்பு 10 படித்துள்ளனர் என்று கூறுவார்கள். இப்போது எங்கு பார்த்தாலும் படிப்பு கல்வி அறிவு அதிகமாகி விட்டது.  யாரைக் கேட்டாலும் எனது  மகள் இன்ஜினியர், மகன் இன்ஜினியர் படிப்பு முடித்து உள்ளனர் சொல்லி வருகின்றனர். அந்த அளவுக்கு மக்கள் படித்ததால் அவருக்கு தேவையான  வேலை கிடைக்கவில்லை, மக்கள் அனைவரும் படித்து வருவதால், வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்று கூறினார்.

உடனடியாக படித்த பிள்ளைகளுக்கு வேலை வேண்டும் என்றால் டி.என்.பி.எஸ்.சி தேர்வை படித்த பிள்ளைகள் எழுத தயாராக வேண்டும் அதில் தேர்வு எழுதி பாஸ் ஆகிவிட்டால் யாருடைய தயவும் தேவை இல்லை 1 பைசா லஞ்சம் கொடுக்காமல் பெற்ற அறிவின் மூலம் வேலை உங்கள் வீடு தேடி வரும் என்று கூறினார்.

அமைச்சரின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.