முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபிலை விலாசிய அதிர் ரஞ்சன் செளத்ரி

பிஹார்:
ந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவரான அதிர் ரஞ்சன் செளத்ரி வெறும் பேச்சு மட்டும் போதாது என்று கபில் சிபிலை விமர்சித்துள்ளதால் கட்சிக்குள்ளான விரிசல்கள் இன்னும் ஆழம் அடைந்து வருவதாக தெரிகிறது.

பீகார் மாநில தேர்தல் படுதோல்விக்கு பிறகு, தனது சக ஊழியர் ஆரம்பத்திலிருந்தே தனது சுய பகுப்பாய்வு குறித்து மிகுந்த அக்கறை காட்டி வருவதாகவும், ஆனால் சமீபத்தில் முடிவடைந்த தேர்தலில் அவருடைய முகத்தை நாங்கள் எங்கும் காணவில்லை, பிகார் மாநிலம் மட்டுமல்லாமல் மத்திய பிரதேசம் உத்தரபிரதேசம் மற்றும் குஜராத் மாநில தேர்தல்களிலும் அவரது முகத்தை நாங்கள் பார்க்கவில்லை என்றும் அதிர் ரஞ்சன் சௌதுரி விமர்சித்துள்ளார்.

இதைப்பற்றி மேலும் பேசிய அதிர் ரஞ்சன் சவுதரி தெரிவித்துள்ளதாவது: தனது வெறும் பேச்சால் மட்டும் எதுவும் சாதிக்க முடியாது என்று கபில் சிபிலிடம் அறிவுறுத்தியுள்ளார், ஒருவேளை பீகாருக்கு அல்லது மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்று அவர் பேசியிருந்தால் காங்கிரஸ் கட்சியின் நிலைமை வலுப்பெற்று இருக்கும், ஆனால் அவர் அதனை செய்யாமல் வெறும் டுவிட்டரில் மட்டும் தகவல்களை பதிவிட்டு வருகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் இதனை ஒரு தொழிலாக கருதி அவற்றை செய்கிறார் என்று நினைக்கிறேன், காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி கூட்டணி பிகாரில் போட்டியிட்ட 70 இடங்களில் காங்கிரஸ் கட்சி 19 இடங்களை வென்றுள்ளது, எதிர்க்கட்சிக் கூட்டணி 110 இடங்களை வென்று, 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட மன்றத்தில் 175 இடங்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதை முழுமையாக கபில் சிபில் அறிவார் என்று நம்புகிறேன்.

அசோக் கெலாட்டும் கபில் சிபிலை குறிவைத்து காங்கிரஸ் கட்சி இழந்ததற்க்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன என்று தெரிவித்துள்ளார். எது எப்படி நடந்தாலும் ஒவ்வொரு முறையும் நாங்கள் ஒற்றுமையாக வெளியே வந்தோம், என்றும் நாட்டை வளர்ச்சியின் பாதையில் முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே என்றும் அதிர் ரஞ்சன் சௌதுரி தெரிவித்துள்ளார்.