ஸ்டாக்ஹோம்: இந்தாண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 2 பெண் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது.

இம்மானுவேல் சார்பென்டியர், ஜெனிபர் ஏ. டவுனா ஆகிய 2 பெண் விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்வுக்குழு கூறி இருப்பதாவது: அவர்கள் இருவரும் பாக்டீரியா நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆய்வு செய், ஒரு மூலக்கூறு கருவியைக் கண்டுபிடித்தனர். இது மரபணுவில்  துல்லியமான கீறல்களை மேற்கொள்ள உதவுகிறது.

இருவரின் கண்டுபிடிப்புதான் புற்றுநோய் சிகிச்சையில் முக்கிய ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.