‘உலக உணவு திட்டம்’ அமைப்புக்கு 2020ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்டாக் ஹோம்: 2020ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ‘உலக உணவு திட்டம்’ என்ற அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய ஆறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

அமைதிக்கான நோபல் பரிசு, ஐரோப்பிய நாடான நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு, ஐரோப்பிய நாடான ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படுவது வழக்கம்.

அக்டோபர் 5ந்தேதி முதல் 2020ம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது.  மருத்துவத்துறைக்கும், , இயற்பியல் துறைக்கும்,  வேதியியல் துறைக்கும், இலக்கியத்துறைக்கு  இதுவரை அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. அவையின் ‘உலக உணவு திட்டம்’  அமைப்புக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசை தேர்வுக்குழு அறிவித்தது. உலகம் முழுவதும் வறுமையில் வாடுபவர்களுக்காக 58 ஆண்டுகள் உணவு அளித்ததற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.