2021ம் ஆண்டு நோபல் பரிசுக்கு டிரம்ப், கிரேட்டா துன்பர்க் உள்ளிட்ட 329 பெயர்கள் பரிந்துரை…!

ஸ்டாக்ஹோம்: 2021ம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், சூழலியல் செயற்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க் உள்ளிட்ட 329 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

உலகளவில் இயற்பியல், அமைதி, வேதியியல், மருத்துவம், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் தலைசிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்க நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

மதிப்புமிக்க விருதான இதை பெற பல்வேறு அமைப்புகளின் பெயர்கள், தனிநபர்கள் பரிந்துரைக்கப்படுவது வழக்கம். இந் நிலையில் 2021ம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு இதுவரை 329 பேர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர். இந்த தகவலை நோபல் கமிட்டி அறிவித்து உள்ளது.

பரிந்துரை பட்டியலில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், ஸ்வீடனை சேர்ந்த  சூழலியல் செயற்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க், ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி உள்ளிட்ட பலர் இடம்பெற்று உள்ளனர். 234 தனிநபர்களும், 95 அமைப்புகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.