இயற்பியலில் மூவருக்கு நோபல் பரிசு 2018 பகிர்ந்தளிப்பு

ஸ்டாக் ஹோம்

ந்த வருடத்தின் இயற்பியல் பிரிவுக்கான நோபல் பரிசு மூவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வருடா வருடம் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி உள்ளிட்ட பல துறைகளில் சிறந்த சாதனைகள் மற்றும் கண்டுபிடிப்புக்களுக்கு  நோபல் பரிசு வழங்கப்படுகிறது.    இந்த ஆண்டுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன.  இதில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த ஜேம்ஸ் பி அலிசன் மற்றும் ஜப்பானை சேர்ந்த தசுகோ ஹோன்ஜோ அகியோருக்கு வழங்கப்பட்டது.

நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறுவோரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்த பரிசு அமெரிக்காவின் ஆர்தர் அஷ்கின், பிரான்சின் ஜெராடு மவுரோ மற்றும் கனடாவின் பெண் விஞ்ஞானி டோன்னா ஸ்டிரிக்லேண்ட் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.   லேசர் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புக்காக இப்பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இயற்பியல் நோபல் பரிசுக்கான பரிசுத்தொகையில் ஆர்தர் அஷ்கினுக்கு 50%, மீதமுள்ள தொகையை மவுரோவுக்கும் டோன்னாவுக்கு பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.

டோன்னா ஸ்டிரிக்லேண்ட் நோபல் பரிசு பெறும் மூன்றாம் பெண் விஞ்ஞானி ஆவார்.  இதற்கு முன்பு மேரி கியூரி மற்றும் மரியா கோபர்ட் மேயர் ஆகிய பெண் விஞ்ஞானிகள் பரிசு பெற்றுள்ளனர்.   தற்போது 55 ஆண்டுகளுக்கு பின் டோன்னா இயற்பியலில் நோபல் பரிசு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.