மருத்துவத்துக்கான இந்த ஆண்டு நோபல் பரிசு அறிவிப்பு

--

ஸ்டாக்ஹோம்

ந்த ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் ஜேம்ஸ் பி அலிசன் மற்றும் ஜப்பான் நாட்டின் தசுக்கு ஹோன்ஜோ ஆகிய இருவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு தோறும் மருத்துவம், இயற்பியல், வேதியல், அமைதி, பொருளாதாரம், இலக்கியம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் புகழ் பெற்று விளங்குவோருக்கு நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கபடுகிறாது.   இந்த 2018 ஆம் ஆண்டின் நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இன்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டது.    இந்த விருதை இருவர் பகிர்ந்துக் கொள்கின்றனர்.

அமெரிக்காவின் ஜேம்ஸ் பி அலிசன் மற்றும் ஜப்பானின் தசுக்கு ஜோன்ஜோ ஆகிய இருவரும் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர்.   புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடித்ததற்காக இந்த விருது இவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

நாளை இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.   அக்டோபர் 3 ஆம் தேதி வேதியியலுக்கான நோபல் பரிசும், 5 ஆம் தேதி அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கபட உள்ளது.   வரும் 8 ஆம் தேதி அன்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.