ஸ்டாக்ஹோம்: உலகின் உயர்ந்த விருதாக அறிவிக்கப்படும் நோபல் பரிசு இன்றுமுதல் வழங்கப்பட உள்ளது. முதல்நாளான இன்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,  ஹெபடைடிஸ் சி வைரஸைக் கண்டுபிடித்ததற்காக 3 பேருக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது. ஹார்வி ஜே ஆல்டர் (Harvey J Alter) மற்றும் மைக்கேல் ஹவுதான் ( Michel Houghton and charles M. Rice)  உடன் சார்லஸ் எம்.ரைஸ் ஆகியோருக்கும் இந்த விருது அளிக்கப்பட்டு உள்ளது.

மருத்துவ நோபல் பரிசானது அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஹார்வி ஜே. ஆல்டர், சார்லஸ் எம். ரைஸ் மற்றும் பிரிட்டன் விஞ்ஞானி மைக்கேல் ஹாட்டன் ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஹெபடைடிஸ் சி வைரஸ் மட்டுமே ஹெபடைடிசை ஏற்படுத்தும் என்ற ஆய்வுக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என மொத்தம் 318 பேர் நோபல் பரிசுக்கான போட்டி பட்டியலில் உள்ளனர்.
இந்நிலையில், நோபல் பரிசு வெல்பவர்கள் குறித்த அறிவிப்பு இன்று (அக்டோபர் 5) முதல் அறிவிக்கப்படுகிறது.. முதல் நாளான இன்று, மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (அக்டோபர் 6ம் தேதி)  இயற்பியல் துறைக்கும், 7ம் தேதி வேதியியல் துறைக்கும், 8ம் தேதி இலக்கியத்திற்கும், 9ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், 10ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.