ஸ்டாக்ஹோம்: உலகின் உயர்ந்த விருதாக அறிவிக்கப்படும் நோபல் பரிசை பெறுபவர்கள் தொடர்பான விபரங்கள் இன்று(அக்டோபர் 5) முதல் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய நிலையில், இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய 6 பிரிவுகளில் நோபல் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என மொத்தம் 318 பேர் நோபல் பரிசுக்கான போட்டி பட்டியலில் உள்ளனர்.
இந்நிலையில், நோபல் பரிசு வெல்பவர்கள் குறித்த அறிவிப்பு இன்று (அக்டோபர் 5) முதல் அறிவிக்கப்படவுள்ளன. முதல் நாளான இன்று, மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ளது.
அக்டோபர் 6ம் தேதி இயற்பியல் துறைக்கும், 7ம் தேதி வேதியியல் துறைக்கும், 8ம் தேதி இலக்கியத்திற்கும், 9ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், 10ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.