நியூயார்க்

ந்த ஆண்டுக்கான வேதியயிலுக்கானக்கான நோபல் பரிசு ஜான் குட்எனஃப், ஸ்டான்லி விட்டிங்காம், மற்றும் அகிரோ யோஷினோ ஆகிய மூவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம். பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுவருகிறது.  இந்த வரிசையில் இன்று வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேதியியலில் ஜான் குட்எனஃப், ஸ்டான்லி விட்டிங்காம் மற்றும் அகிரோ யோஷினா ஆகிய மூவருக்கு வழங்கப்பட்டுள்ளது.  இம்முறை லிதியம் அயான் பேட்டரி மேம்பாட்டுக்காக இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த மேம்படுத்தப்பட்ட பேட்டரி மூலம் மொபைல், கார்கள் உள்ளிட்ட பலவற்றையும் நெடுநேரம் இயக்க முடியும்.

இந்த கண்டுபிடிப்புக்கான பரிசுத் தொகையை இம்மூவரும் பகிர்ந்துக் கொள்கின்றனர்.  ஏற்கனவே நேற்று இயற்பியலுக்கான பரிசு பெறுவோர் பெயர் அறிவிக்கப்பட்டது தெரிந்ததே.