சான்ஃப்ரான்சிஸ்கோ

ர்வதேச அணு ஆயுத ஒழிப்புப் பிரசாரக் குழுவுக்கு 2017ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பட்டியல் அறிவிக்கப்பட்டு வருகிறது.   நோபல் கமிட்டி, ”நாம் தற்போது அணு ஆயுதங்கள் உபயோகப்படுத்தும் அபாயம் மிக்க உலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.  அணு ஆயுதம் உலகத்தை விரைவில் அழித்து விடும்.  அதனால் இந்த வருடத்துக்கான நோபல் பரிசை சர்வதேச அணு ஆயுத ஒழிப்பு பிரச்சாரக் குழுவுக்கு வழங்கு கிறோம்.   இந்த பிரசாரக் குழு பல நாடுகளில் தங்களின் பிரச்சாரத்தின் மூலம் மக்களை அணு ஆயுதத்துக்கு எதிராக திருப்பி உள்ளனர்.   அத்துடன் இந்தக் குழுவால் பல நாடுகள் அணு ஆயுதங்களுக்கு தடை விதித்துள்ளன” என கூறி உள்ளது

அதன்படி இந்த பரிசு அந்தக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.  அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே போர் மூண்டு அணு ஆயுதங்கள் உபயோகப்படுத்தப் படும் அபாயம் உள்ள இந்த நேரத்தில் இந்தக் குழுவுக்கு நோபல்  பரிசு கிடைத்தது குறிப்பிடத் தக்கது.