இன்று நோபல்  பரிசு – அன்று திகார் சிறை : அபிஜித் பானர்ஜியின் அனுபவங்கள்

டில்லி

ற்போது நோபல் பரிசு பெற்றுள்ள அபிஜித் பானர்ஜி கடந்த 1983 ஆம் வருடம் 10 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த வருடத்துக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்த பரிசு பெறுவோர் அபிஜித் பானர்ஜி, அவர் மனைவி எஸ்தர் டுப்ளோ மற்றும் மைக்கேல் கிரெமர் ஆகியோர் ஆவார்கள்.    உலகில் ஏழ்மையை அகற்ற இவர்கள் மேற்கொண்டு வரும் பரிசோதனை முயற்சிகளுக்காக இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது.   உலகெங்கும் இருந்து இவர்களுக்குப் பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

இந்த பரிசு பெற்றவர்களில் ஒருவரான அபிஜித் பானர்ஜி இந்தியாவைச் சேர்ந்தவர். இவர் இந்தியாவில் கொல்கத்தா, டில்லி மற்றும் வெளிநாட்டில் ஹார்வர்ட் பலகலைக்கழகம் ஆகிய இடங்களில் பயின்றவர் ஆவார்.  இவர் கடந்த 1983 ஆம் வருடம் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது பலரால் நம்ப முடியாமல் இருந்திருக்கலாம்.  ஆனால் அது உண்மை ஆகும்.

இது குறித்து பானர்ஜி கடந்த 2016 ஆம் வருடமொரு பத்திரிகைக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.  அதில், “கடந்த 1983 ஆம் ஆண்டு ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதை எதிர்த்து நானும் சில மாணவர்களும் பல்கலைக்கழக துணை வேந்தரை முற்றுகை இட்டு போராட்டம் செய்தோம்.

அதையொட்டி எங்களைக் கைது செய்த காவல்துறையினர் எங்களைச் சரமாரியாகத் தாக்கி திகார் சிறையில் அடைத்தனர்.    எங்கள் மீது ஆள்கடத்தல் குற்றம் மட்டும் இன்றி கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகளும் பதியப்பட்டன.   அதன் பிறகு அந்த குற்றங்கள் விலக்கப்பட்டன.    நல்லவேளையாக எங்கள் திகார் சிறைவாசம் 10 நாட்களில் முடிந்தது.” என அபிஜித் பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி