என்னையும் ரசிகர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது: ரஜினி

சென்னை:

ன்னையும் உங்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என்று ரஜினி தனது  ரசிகர்களுக்கு ரஜினி அறிக்கை வாயிலாக தெரிவித்து உள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தல் நடிகர் ரஜினிகாந்த நடித்துவரும் திரைப்படம் “பேட்ட” படம் முடிவடைந்த நிலையில், மீண்டும் தனது கட்சி தொடர்பான வேலைகளில் ரஜினி சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களின் சந்திப்பின்போது, கட்சி தொடங்குவதற்கான 90 சதவீத வேலைகள் நடந்து முடிந்துவிட்டதாகவும், நாடாளுமன்றத் தேர்தல் அறிவித்த பின், நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும் என  கூறியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது ரஜினி தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில், தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “எண்ணெய் வாழவைத்த தெய்வங்களான எனது அன்பு ரசிகர்களுக்கு, நான் கடந்த 23 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், மக்கள் மன்ற செயல்பாடுகள் குறித்து சில சில உண்மைகளை சொல்லி யிருந்தேன். அது கசப்பானதாக இருந்தாலும் அதில் உண்மைகளையும், நியாயத்தையும் புரிந்து கொண்டதற்கு என மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

உங்களைப் போன்ற ரசிகர்களை நான் அடைந்ததற்கு மிகவும் பெருமைபடுகிறேன். என்னையும், உங்களையும் யாராலும் எந்த சக்தியாலும் பிரிக்கமுடியாது. நாம் எந்த பாதையில் போனாலும் அந்த பாதை நியாயமானதாக இருக்கட்டும். ஆண்டவன் நமக்கு துணை இருப்பான்”.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.