சியோல்

கொரோனா வைரஸ் தொற்றால் வடகொரியாவில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,15,057 ஆகி உள்ளது.   இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 1.25 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.   இந்த கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பரவி உள்ளது.

வடகொரியா நாட்டின் அவசரக் கால தொற்றுநோய் தடுப்புத் துறை இயக்குநர் பாக் மியாங்க், “கொரோனா வைரஸ் தொற்றால் வட கொரியாவில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை.  இந்த வைரஸ் சீனாவில் ஜனவரி மாதம் பரவை தொடங்கிய போதே வட கொரியா விழித்துக் கொண்டது.

அப்போதிலிருந்தே நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக்காட்டது.  இதனால் யாருக்கும் கொரொனா தொற்று உண்டாகவில்லை.” என அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆயினும் பல உலக நாடுகள் இதை நம்பவில்லை.   வட கொரியாவில் நவீன வசதிகள் கிடையாது எனவும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்த உண்மைகளை அந்நாடு மறைப்பதாகவும் கூறப்படுகிறது.