தனி மனித இடைவெளியை கடைபிடிக்காததால் சென்னையில் கொரோனா பரவல் தீவிரம்… எடப்பாடி பழனிச்சாமி

சென்னை:

னி மனித இடைவெளியை கடைபிடிக்காததால் சென்னையில்  கொரோனா பரவல் தீவிரமடைந்து இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

மேலும், கொரோனா இல்லாத மாவட்டங்களில் படிப்படியகாதொழில்கள் தொடங்க மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மே 3ந்தேதியுடன் முடிவுக்கு வருகிறது. ஆனால், தமிழகத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. இதனால் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிக்கப்படவாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் முழு ஊரடங்கை தொடா்ந்து நீட்டிப்பதா அல்லது தளா்வு அளிப்பதா என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

முன்னதாக செய்தியாளர்களிடம் எடப்பாடி பேசியதாவது,

கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கை எடுத்து வரும் ஆட்சியர்களுக்கு என்னுடைய பாராட்டுகள். ரேசன் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து மற்ற அனைத்து பகுதிகளிலும் நோய்த்தொற்று பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பேரூராட்சி, நகராட்சிக்குள் கொரோனா கட்டுக்குள் வந்தாலும், மாநகராட்சிக்குள் கட்டுக்குள் வரவில்லை.

சமூக இடைவெளியை பின்பற்றாத காரணத்தால், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் எண்ணிக்கை உயா்ந்து கொண்டிருக்கிறது .

காய்கறிக் கடைகளில் தனிமனித இடைவெளி முறையாக பின்பற்றப்படவில்லை;

ரேசன் கடைகள், காய்கறிக் கடைகளில் தனி மனித இடைவெளியை உறுதி செய்ய தன்னார்வலர்களை பயன்படுத்தலாம்.

காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்ய தேவையான நடவடிக்கைகளை ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும்.

எண்ணெய், ஜவ்வரிசி, முந்திரி உள்ளிட்ட விவசாயம் சார்ந்த தொழில்கள் நடைபெற ஆட்சியர்கள் உதவ வேண்டும்.மே மாதத்திற்கும் அரிசி, பருப்பு உள்ளிட்டவை முறையாக வழங்கப்படுவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

ரேசன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் தேதி மற்றும் நேரத்தை பொதுமக்களிடம் தெளிவாக எடுத்துக் கூற வேண்டும்;

வேளாண் சார்ந்த தொழில்கள் மற்றும் விளைபொருட்கள் கொண்டு செல்வதை யாரும் தடுக்கக்கூடாது.

வேளாண் பணிகளுக்கு ஊரடங்கில் முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாளர்கள் முகக் கவசம் அணிய வேண்டும்.

100 நாள் பணியாளர்கள் 55 வயதுக்கு மேல் இருந்தால் அவர்களை தவிர்க்க வேண்டும்.

கொரோனாவால் பாதிக்கப்படாத பச்சைப் பகுதிகளில் தொழில்கள் இயங்க அனுமதிக்கலாம்.

கிடங்கில் வைக்கப்படும் விளைப் பொருட்களின் மதிப்பில் பாதி அளவை விவசாயிகளுக்கு கடனாக வழங்கலாம்.

காய்கறி , மளிகை கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை.

மே மாதத்திற்கான ரேசன் பொருட்கள் முறையாக வழங்குவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா பாதிப்பு குறைந்த பச்சைப்பகுதிகளில்  பகுதிகளில் சில தொழில்களுக்கு தளர்வு வழங்குவது பற்றி அரசு முடிவெடுக்கும்.   அரசு தரும் அறிவுரைகளை ஏற்று ஆட்சியர் செயல்படலாம்.

தமிழகத்தில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே பச்சை பகுதிக்குள் உள்ளது. அனைத்து பகுதிகளையும் பச்சை மண்டலமாக மாற்றுவது மக்கள் கையிலேயே உள்ளது.

அரசின் ஊரடங்கு தளர்வை மாவட்ட ஆட்சியர்கள் சரியாக அமல்படுத்த வேண்டும்.

தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து யாரும் வெளியே வரவும் கூடாது. உள்ளே செல்லவும் கூடாது.

தடை செய்யப்பட்ட பகுதியில் தினமும் 2 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

கொரோனா தொற்று குறைந்தால் மட்டுமே தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பும்.

இவ்வாறு  முதல்வர் பழனிசாமி கூறினார்.