பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி என்பதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை: ஸ்டாலின்

சென்னை:

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியை நான் பிரதமர் வேட்பாளர் என கூறியதை யாரும் எதிர்க்க வில்லை என்று தெரிவித்தார்.

ராகுல்காந்திய பிரதமர் வேட்பாளராக திமுக தலைவர் ஸ்டாலின் வழிமொழிந்ததை தொடர்ந்து, கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,   ராகுல் காந்தியை நான் பிரதமர் வேட்பாளர் என கூறியதை யாரும் எதிர்க்க வில்லை என்று தெரிவித்தார்.

திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கூட்டம் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது,

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்  விவசாய கடன் , கல்விக் கடனை ரத்து செய்ய  வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.

மேகதாது அணை தொடர்பாக கர்நாடகாவுக்கு, மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்களிடம் செல்வோம், சொல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம் என்ற முழக்கத்தை அடிப்படையாக வைத்து ஜனவரி முதல் ஊராட்சி பகுதிகளில் திமுக பயணம் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

மேலும், ராகுல் காந்தியை நான் பிரதமர் வேட்பாளர் என கூறியதை யாரும் எதிர்க்கவில்லை என்று கூறிய ஸ்டாலின் எமர்ஜென்சி காலத்தை விட மத்திய அரசு தற்போது சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறது என்று குற்றம் சாட்டினார்.

ஜனவரி 3-ம் தேதியில் இருந்து ஊராட்சி சபை கூட்டம் நடத்துவோம் என்றும், 12,617 ஊராட்சிகளில் உள்ள மக்களை ஒருங்கிணைத்து ஊராட்சி சபை கூட்டம் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Nobody, Prime Ministerial candidate, rahul gandhi, resistance, stalin, எதிர்ப்பு, தமிழ்நாடு, பிரதமர் வேட்பாளர், ராகுல்காந்தி, ஸ்டாலின்
-=-