உயர் அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவந்ததை அடுத்து நொய்டா எஸ்.எஸ்.பி. இடைக்கால பணிநீக்கம்

--

புதுடில்லி: நொய்டா எஸ்எஸ்பி வைபவ் கிருஷ்ணா தயார் செய்த ஒரு அறிக்கையில் மாநிலத்தின் உயர் போலீஸ் அதிகாரிகள் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய விவரங்கள் வெளியே கசிந்ததையடுத்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.  பணியிட மாற்றங்களுக்காக பணம் பெற்றதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள், இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஆராய ஐ.பி.எஸ் அதிகாரி மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரி உட்பட இயக்குநர் விஜிலென்ஸ் தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணா இடம்பெறும் ஒரு பாலியல் அரட்டை வீடியோ வலம் வரத் தொடங்கிய பின்னர் அறிக்கையின் விவரங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டன. அந்த வீடியோ மார்ஃபிங் செய்யப்பட்டதாகவும், உயர் அதிகாரிகள் மற்றும் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் சம்பந்தப்பட்ட ஒரு குற்றவியல் உறவை அம்பலப்படுத்த முயன்றதால், அவரது நம்பகத்தன்மையை கெடுக்கும் ஒரு முயற்சி என்றும் கிருஷ்ணா கூறியிருந்தார்.

கசிந்த அறிக்கை குறித்து கிருஷ்ணாவிடம் விளக்கம் கோர ஜனவரி 3 ம் தேதி போலீஸ் டைரக்டர் ஜெனரல் ஓ பி சிங் உத்தரவிட்டார்.

நவம்பர் மாதம், கிருஷ்ணா ரகசிய அறிக்கையை முதலமைச்சர் மற்றும் டிஜிபி அலுவலகங்களுக்கு அனுப்பியிருந்தார். காவல்துறை அதிகாரிகள் பற்றிய போலி செய்திகளை வெளியிட்டது, சட்டவிரோத நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டது, உதவிக்கு பணம் தேடுவது, மிரட்டல் விடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு ஊடகவியலாளர்கள் சுஷில் பண்டிட், உதித் கோயல், சந்தன் ராய் மற்றும் நிதேஷ் பாண்டே ஆகியோரை கவுதம் புத்த நகர் போலீசார் கைது செய்ததைத் தொடர்ந்து அவர் இதைத் தயாரித்தார்.

இந்த நான்கு பேருக்கும் எதிரான விசாரணையின் போது, ​​மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் அவர்கள் பணியிடம் நிரப்புவதற்கான கட்டணம் குறித்து பேசிய உரையாடல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.