நொய்டா:

கால் இழந்த மாணவர் 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் 93% மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.


கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி பள்ளி பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது, விபத்துக்குள்ளானது.

வெளியே தூக்கி எறியப்பட்ட கரன் என்ற 12 வயது சிறுவனின் வலது காலில் வேகமாக வந்த லாரி ஏறியது. இதில் சிறுவனின் கால் 80% செயல் இழந்தது.

நொய்டா ராணுவ பள்ளியில் தொடர்ந்து படித்த கரன், நம்பிக்கை இழக்கவில்லை. விபத்துக்கு முன்பு தனிமையிலேயே இருந்த கரன், விபத்துக்கு பின் நண்பர்களுடன் பழகினான். இசையை ரசித்தான்.

என் மன அழுத்தத்தை இசை போக்குகிறது என்று கூறும் கரனுக்கு அனைத்து வகை இசையும் பிடிக்குமாம்.

கம்ப்யூட்டர் என்ஜினியர் ஆக வேண்டும் என்பதே கரனின் ஆசை. 10-ம் வகுப்பில் 95% மதிப்பெண் பெற்ற கரன், 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் 93% மதிப்பெண் எடுத்துள்ளார்.

கால் போய்விட்டதே என்று முடங்காமல், மீண்டும் எழுச்சியுடன் கரன் எழுந்து வருவதற்கு அவன் படித்த பள்ளியின் நிர்வாகமும், ஆசிரியர்களும் ஊன்றுகோலாக இருந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.