டெல்லி:

பாரதி ஏர்டெல், பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து 5ஜி மொபைல் ள சவையை மீண்டும் தொடங்க நோக்கியா முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் நோக்கியா புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது என்று எக்னாமிக்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நோக்கியாவில் இந்திய சந்தை தலைவர் சஞ்சய் மாலில் கூறுகையில், ‘‘5ஜி சேவையை நாட்டிற்கு அறிமுகம் செய்யும் வகையில் இந்த ஆலோசனை உதித்தது. அதற்கு என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது. 5ஜி சேவை வழங்க ஆயத்த நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள நோக்கியா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் மூலம் 5ஜி இணைப்புக்கு தேவையான அம்சங்கள், பங்குதாரர்களின் தேவைகள் குறித்து ஏற்கனவே அறியப் பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டை புதிய தொழில்நுட்பத்தை நோக்கி அழைத்துச் செல்லப் படும்’’ என்றார்.

வளர்ந்த நாடுகளில் 2020 மற்றும் 2022ம் ஆண்டுகளில் 5ஜி சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் 4ஜி ஊடுறுவல் ஒரு வகையான இளஞ்சூட்டை ஏற்படுத்தியுள்ளது. இது 5ஜி சேவையை தத்தெடுப்பதற்கான நம்பிக்கையை ஏற் படுத்தியுள்ளது.

சர்வதேச அளவில் இந்தியாவை 5ஜி சேவைக்கு அழைத்து செல்லும் நோக்கத்தோடு மொபைல் நிறுவனங்களும், டெலிகாம் நிறுவனங்களும், மத்திய அரசும் இணைந்து செயல்படுகிறது. உலக மொபைல் மாநாட்டில் சாம்சங்கும், ரிலையன்ஸ் ஜியோவும் இணைந்து 5ஜி சேவையை இந்தியாவில் கொண்டு வரப்படும் என அறிவித்தன.

டெலிகாம் செயலாளர் தீபக் கூறுகையில், “ 3ஜி மற்றும் 4ஜி இந்தியாவில் கொண்டு வர தாமதமானது. ஆனால் இது 5ஜி அறிமுகத்தில் இருக்காது. இது தொடர்பியல் பிரச்னை மட்டும் கிடையாது. உற்பத்தி தொடர்பான பிரச்னையாகும்” என்றார்.