சத்தீஸ்கர் தேர்தல் : முதல் கட்ட வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

ராய்ப்பூர்

த்தீஸ்கர் மாநில சட்டப்பேரவையின் முதல் கட்ட தேர்தலுக்காக 18 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது.

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 12 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பகுதிகளில் மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

இந்த முதற்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி உள்ளது. இந்த பகுதியில் பல முறை நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். அதனால் இங்கு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நக்சல் தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி., “சத்தீஸ்கர் மாநிலத்தில் பல பகுதிகளில் நக்சலைட் மற்றும் மாவோயிஸ்ட் தாக்குதலில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதனால் அதிக அளவிலான காவல் படையினர் பணி அமர்த்தப் பட்டுள்ளனர். அத்துடன் ரோந்துப் பனிகளும் தீவிரமாக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் எந்த இடையூறும் இன்றி வாக்களிக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.