Random image

சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் இல்லா வாரண்ட் : மகாராஷ்டிர நீதிமன்றம்

ர்மாபாத், மகாராஷ்டிரா

ந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் 14 பேர் மீது மகாராஷ்ட்ர நீதிமன்றம் ஜாமீனில் வர முடியாத வரண்ட் பிறப்பித்துள்ளது.

மகாராஷ்டிராவில் ஓடும் நதி பாப்லி ஆறு.   இந்த ஆற்றின் குறுக்கே கடந்த 2010 ஆம் ஆண்டு மகாராஷ்டிர அரசு அணை ஒன்றை கட்ட முடிவு செய்தது.   இதை  எதிர்த்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் 14 பேர் போராட்டம் நடத்தினர்.    போராட்டத்தில் தர்ணா மற்றும் பாத யாத்திரை நடத்திய இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது.

வழக்கு பதியபட்ட பிறகு அரசால் எந்த ஒரு நடவடிக்கையும் இவ்விஷயத்தில் எடுக்கப்படவில்லை.   கிட்டத்தட்ட அனைவரும் இதை மறந்து விட்டனர் எனவே கூறலாம்.    தற்போது தெலுங்கானா மாநில சட்டப்பேரவை கலைக்கப்பட்டுள்ளது.   நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் காங்கிரசுடன் கூட்டணியில் இணைய உள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை திருப்பதி கோவிலுக்கு சந்திரபாபு நாயுடு வந்தார்.  அவர்  ஏழுமலையான் கோவிலுக்கு சென்று பட்டு வேட்டி சமர்ப்பிக்க அங்கு சென்றிருந்தார்.   அப்போது அவரிடம் மகாராஷ்டிர மாநிலம் தர்மாபாத் நீதிமன்ற ஆணை அளிக்கப்பட்டது.

அந்த ஆணையில் நீதிமன்றம்  கடந்த 2010 ஆம் ஆண்டு தர்ணாவில் ஈடுபட்ட சந்திரபாபு நாயுடு மற்றும் 14 பேர் வரும் 21 ஆம் தேதி தர்மாபாத் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.   அதை மீறினால் அவர்களை கைது செய்ய ஜாமினில்லா வாரண்ட் ஒன்றை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

You may have missed