ஜெய்ஷ் ஈ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் மரணமா? 

பாலகோட்

புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ் ஈ முகமது இயக்க தலைவர் மசூத் அசார் மரணமடைந்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வந்துள்ளன.

புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டது. அந்த இயக்கம் மேலும் பல தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்த உள்ளதாக தகவல்கள் வந்ததால் இந்திய விமானப்படை பாலகோட் பகுதியில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

ஜெய்ஷ் ஈ முகமது தலைவருக்கு புகலிடம் அளித்ததை முதலில் பாகிஸ்தான் அரசு மறுத்தது. அதே நேரத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி அவர் பாகிஸ்தானில் உள்ளதாகவும் ஆனால் மிகவும் உடல்நலம் குன்றி உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் நடமாடமுடியாத அளவுக்கு அசார் உடல் நலம் குன்றி உள்ளதாகவும் குரேஷி தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது மசூத் அசார் பாலகோட் பகுதியில் மரணம் அடைந்துள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.