சென்னை : நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்கிறது

சென்னை

நேற்று இரவு முதல் சென்னையில் விட்டு விட்டு மழைபெய்து வருகிறது.

வங்கக் கடலில் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

குறிப்பாக சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ராமநாதபுரம் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் யூனியன் பிரதேசத்திலும் இன்று கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்படிருந்தது.

அதே போல திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை முதல் கன மழை பெய்யலாம் எனவும் சென்னை வானிலை மையம் கூறி இருந்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேர்று மாலை முதலே வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. நேற்று இரவு முதல் நகரில் பல இடங்களில் ஆங்காங்கே விட்டு விடு மழை பெய்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடலோர பகுதிகளான பொன்னேரி, எண்ணூர், திருவொற்றியூர், உள்ளிட்ட பகுதிகளிலும் பெரியபளையம் கும்மிடிபூண்டி ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.