பூரி ஜெகந்நாதர் கோவிலுக்குள் மற்ற மதத்தினரை அனுமதிக்க முடியாது: கோவில் நிர்வாகம்

டில்லி:

ந்து அல்லாதவர்கள் பூரி ஜெகந்நாதர் கோவிலில் நுழையக்கூடாது. அவர்களை அனுமதிக்கவும் முடியாது என்று  கோவில் நிர்வாகம் கூறி உள்ளது.

பிரசித்தி பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலயத்திற்குள்  இந்து அல்லாத மற்ற மதத்தி னரையும் அனுமதிக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகத்தை உச்சநீதி மன்றம் வலியுறுத்தி இருந்தது.

இந்த நிலையில்,  பூரி ஜெகந்நாதர் கோவிலினுள் இந்து அல்லாதவர்கள் நுழை வதை அனுமதிக்க முடியாது என கோவில் நிர்வாகத்தை சேர்ந்த சங்கராச்சாரியா நிஷ்சலனந்தா சரஸ்வதி  தெரிவித்துள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க ஜெகநாதர் ஆலயம்  ஒடிசா மாநிலம் பூரி கடற்கரைப் பகுதியில் அமைந்து உள்ளது.  இந்த ஆலயத்தில் மூலவர்களாக  ஜெகந்நாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்திரை தேவி ஆகிய மூவரும் ஒரே கருவறையில் அமர்ந்து பக்தர்களுக்கு  அருள்பாலித்து வருகின்றனர்.

உலக அளவில் பிரசித்தி பெற்ற கோவில் 12-ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக கூறப்படுகிறது.  இக்கோவிலில் இந்துக்கள் மட்டுமே நுழைய அனுமதி உள்ளது.

இந்த நிலையில்,  ஜெகந்நாதர் கோவிலில் பார்வையாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுமீதான விசாரணை முடிந்து, கடந்த 6ந்தேதி உச்சநீதி மன்றம் கூறிய தீர்ப்பில்,  இந்து மதத்தை சாராதவர்களும் கோவிலினுள் நுழைய அனுமதி அளிப்பது குறித்து மறுபரிசீலனை செய்யும்படி கோவில் நிர்வாகாத்தை கேட்டுக்கொண்டது.

உச்சநீதி மன்றத்தின் இந்த வேண்டுகோளை விசுவ இந்து பரிஷத் அமைப்பு கடுமையாக எதிர்த்தது.

இந்த நிலையில், பூரி நாடாளுமன்ற உறுப்பினர் பினகி மிஸ்ரா மற்றும் கோவில் நிர்வாகத்தை சேர்ந்த மகேஸ்வர மோகந்தி உள்ளிட்ட 22 பேர் அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து உச்சநீதி மன்ற தீர்ப்பு குறித்து விவாதித்தனர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெகந்நாதர் கோவிர் நிர்வாகி களில் ஒருவரான சங்கராச்சாரியா நிஷ்சலனந்தா சரஸ்வதி, பூரி ஜெகந்நாதர் கோவிலினுள் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவதை அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.

You may have missed