சென்னை,

மிழகத்தில் அங்கீகரிக்கபடாத வீட்டு மனைகள் வரைமுறைப்படுத்தும் திட்டம் மேலும் 6 மாதம் நீட்டிப்பதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஏற்கனவே வரைமுறைப்படுத்த கொடுக்கப்பட்டிருந்த 6 மாத காலத்தை ஒரு வருடமாக நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தற்போது மேலும் 6 மாதம் நீட்டித்து, இதற்கான கால அவகாசம் 03.05.2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தனி நபர்கள் வாங்கிய மனைகளுக்கு OSR கட்டணத்திலிருந்து விடுவிப்பு. இதர மொத்த கட்டணம் சதுர அடிக்கு: மாநகராட்சி − ரூ. 56 என்றும்,  நகராட்சி1 – ரூ. 29,  நகராட்சி 2 – ரூ 20,  பேரூராட்சி –  ரூ.10,  கிராம ஊராட்சி – ரூ. 5  என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மனைகள் உள்ள சாலைகளின் படி வரன்முறைப் படுத்தப்படும் மனைகள் பிரிக்கப்பட்ட cutoff date: 05.08.1975−20.10.2016 என்றும் சிஎம்டிஏ  லிமிட்,   01.01.1980-20.10.2016- DTCP limit 29.11.1972-20.10.2016 மற்ற நகரங்கள்.

பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் மனைகளை அப்ரூவ்டு  மனைகளாக மாற்றிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.