Random image

அபராத அறிவிப்பு….இந்திய டெபாசிட்களை திரும்ப பெறும் கென்யா வாழ் குஜராத்திகள்

காந்திநகர்:

கட்ச் வங்கிகளில் இருந்து வெளிநாட்டு வாழ் குஜராத்திகளின் டெபாசிட்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது.

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் வெளிநாடு வாழ் குஜராத்திகள் அதிகம் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கென்யாவை சேர்ந்தவர்கள். இவர்கள் கட்சி மாவட்ட வங்கிகளில் அதிகளவு பணம் டெபாசிட் செய்திருந்தனர். கடந்த சில மாதங்களாக வங்கிகளில் இருந்து இந்த பணம் அதிகளவில் வெளிநாடு வாழ் இந்தியர்களால் திரும்ப பெறப்பட்டு வருகிறது. இந்த பணம் மீண்டும் ஆப்ரிக்க நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை ரூ.430 கோடி வரை திரும்ப பெறப்பட்டுள்ளது. கென்யாவுக்கு வெளியில் ஈட்டப்பட்ட வருவாய்க்கு அபராதம் மற்றும் வரி விதிக்கும் நடைமுறையை கென்யா அறிமுகம் செய்துள்ளது. இதற்கு பயந்து வங்கிகளில் இருந்து பணம் திரும்ப பெறப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

இதன் மூலம் ரூ.12,302 கோடியாக இருந்த டெபாசிட் தற்போது ரூ.11,872 கோடியாக குறைந்திருப்பது வங்கிகளின் புள்ளி விபரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. ஆனால், 2017ம் ஆண்டு டிசம்பர் முதல் வெளிநாடு வாழ் குஜராத்திகள் டெபாசிட்டுகளில் இருந்து ஆயிரம் கோடி ரூபாய் வரை திரும்ப பெறப்ப்டடுள்ளது என்று வங்கி அதிகாரிகள், வரி வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.