தரமில்லாத மின் கம்பியே விபத்துக்கு காரணம்! மின் பணியாளர் சங்கம் குற்றச்சாட்டு!!

சென்னை,

மீப காலமாக கட்டிடங்களில் ஏற்படும் தீ விபத்துக்கு தரமில்லாத மின் கம்பிகளே காரணம் என்று தமிழ்நாடு அனைத்து மின் பணியாளர் முன்னேற்ற சங்கம் குற்றம் சாட்டி உள்ளது.

தமிழ்நாடு அனைத்து மின் பணியாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது சங்க பொதுச்செயலாளர் நாகலிங்கம் கூறியதாவது,

தமிழகத்தில சமீபத்தில் ஏற்ப்படும் பல்வேறு தீவிபத்து சம்பவங்கள்  மீன்கசிவு காரணமாக ஏற்ப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.

மேலும்  பல்வேறு வணிக நிறுவனங்களில் தரமான மின் கம்பிகள் பயன்படுத்துவதில்லை என்றும் தரம் குறைந்த பிரேக்கர்கள் பயன்படுத்தப்படுவதால் தான் இது போன்ற தீ விபத்துக்கள் ஏற்படுவதாக  குற்றம் சாட்டினர்.

அனுபவம் இல்லாத  மின் பணியாளர்கள் மற்றும் முறையான திட்டம் இல்லாதது போன்றவை தான் இது போன்ற தீ விபத்துகளுக்கு காரணம் என்று தெரிவித்தனர்.

பொதுவாக,  நிறுவனங்கள்  கட்டிட அமைப்புகள் குறித்து மட்டும் கவனம் செலுத்தப்படுவதாகவும் உள்ளே பயன்படுத்தப்படும் பல முக்கியமான பொருட்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதில்லை என்று குற்றம் சாட்டினர்.

எந்த ஒரு வணிக நிறுவனமும் சரியானபடி  விதி முறைகளை பின்பற்றவில்லை என்று குற்றம் சாட்டிய நாகலிங்கம், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்பட்டால் மட்டுமே  இது போன்ற விபத்துக்களை தடுக்க முடியும் .

இவ்வாறு அவர் கூறினார்.