கொரோனா நோயாளிகளுக்கு அசைவ உணவு! புதுச்சேரி அரசு உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில்,  கொரானா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், ஊட்டச்சத்து மிக்க அசைவ உணவு வழங்க அரசு  உத்தரவிட்டு உள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.  தொற்று பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதே வேளை யில் தொற்று அறிகுறி உள்ளவர்கள், அரசின் தனிமைப்படுத்துதல் மையத்தில் வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், புதுச்சேரியில், கொரோனா நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துமிக்க அசைவ உணவு வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்து அறிவித்து உள்ளது. அதன்படி, கொரோனா நோயாளிகளுக்கு  செலவிடும் தொகையை ரூ.300 ஆக உயர்த்தி புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து மிக்க அசைவ உணவுகள் வழங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.