சிறுமிகள் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் யாரும் தப்ப முடியாது…..மோடி

டில்லி:

சிறுமிகள் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் யாரும் தப்ப முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டில்லியில் அம்பேத்கர் நினைவிடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி பேசுகையில், ‘‘நாகரிமான சமுதாயம் கொண்ட நாட்டில் பாலியல் வன் கொடுமைகள் நடப்பது வெட்கக்கேடானது. நமது மகள்களுக்கு இழைக்கப்பட்ட சம்பவத்திற்கு நிச்சயம் நீதி கிடைக்கும்.

குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது. குற்றவாளிகள் யாரும் காப்பற்றப்பட மாட்டார்கள். வாக்கு வங்கி அரசியலுக்காக அம்பேத்கர் பெயரை காங்கிரஸ் பயன்படுத்துகிறது. எஸ்.சி.எஸ்.டி., சட்டம் நீர்த்துப் போகச் செய்ய மத்திய அரசு அனுமதிக்காது’’ என்றார்.