டில்லி

ந்தியாவில் மளிகை கடைகள் மற்றும் உணவு விடுதிகள் தொடங்குவதற்கான விதிகளை தளர்வு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் தற்போதைய நிலையில் மளிகைக்கடைகள் தொடங்க 28 இடங்களில் ஒப்புதல் பெற உள்ளன.   அத்துடன் உணவு விடுதிக்கு 17 ஒப்புதல்கள் தேவைப்படுகிறது.   இந்த ஒப்புதல்கள் அனைத்தும் முழுமையாக பெற்ற பிறகே ஒரு மளிகைக்கடை அல்லது உணவு விடுதிகளுக்கான உரிமம் வழங்கப்படும் என்னும் விதி உள்ளது.

உணவு விடுதிகளில் தீயணைப்பு உள்ளிட்ட துறைகளின் தடையில்லா சான்றிதழ்,  இசைகளை ஒலிபரப்ப உரிமம் மற்றும் உணவு கட்டுப்பட்டு துறையின் அனுமதி ஆகியவை முக்கியமாகும்.   இதைப் போலவே மளிகைக் கடைகளுக்கு பல அனுமதிகள் முக்கியமானவை என குறிப்பிடப்பட்டுள்ளது.  இதனால் சிறு தொழில்கள் வளர்ச்சி குறைவதாக கருத்து எழுந்தது.

அதை ஒட்டி அரசு அனைத்து சிறு தொழில்களையும் ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளது.  இவ்வகையில் இந்த தொழில் தொடக்கத்துக்கு தேவையான பல அனுமதிகள் குறையக் கூடும்.   இவ்வாறு விதிகள் தளர்த்தப்படுவதால் சிறு தொழில்கள் முன்னேறும் என கூறப்படுகிறது.