பியோங்க்சங்

வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் நடக்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது குறித்து தென்கொரியாவுடன் வட கொரியா பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

பன்முன்ஜோம் என்பது வட மற்றும் தென் கொரியாவின் எல்லையில் உள்ள ஒரு பகுதியாகும்.    இந்தப் பகுதி பதட்டம் நிறைந்த பகுதியாகும்.   இந்த பகுதி   வடக்கு மற்றும் தென் கொரிய ராணுவ வீரர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டு உள்ள ஒரு பகுதியாகும்.    எல்லை தாண்டுவோரை உடனடியாக சுடப்படும் அபாயம் இந்தப் பகுதியில் உள்ளது.    கடந்த நவம்பர் மாதம் எல்லை தாண்டிய வட கொரிய வீரர் ஒருவரை வட கொரிய ராணுவமே சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த பதட்டம் மிக்க பகுதியில் வட கொரியா மற்றும் தென் கொரியாவின் பிரதிநிதிகள் இன்று குளிர்கால ஒலிம்பிக்ஸ் பற்றி பேச்சு வார்த்தை நிகழ்த்தி வருகின்றனர்.

வரும் பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி முதல் தென் கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.   இந்த போட்டியில் வட கொரியா கலந்துக் கொள்ளுமா என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது.

வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்குப் பிறகு  இந்த இருநாடுகளின் இடையிலான உறவு மோசமடைந்தது.   இந்நிலையில் இரு ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாடுகளும் பேச்சு வார்த்தை நடத்த உள்ளன.

இந்தப் பேச்சு வார்த்தையின் போது வட கொரியா குளீர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துக் கொள்வது பற்றி ஆராயப்படும் என தெரிய வந்துள்ளது.   இது தவிர இரு நாட்டுக்கான உறவை மேம்படுத்துவது பற்றியும் பேசப்படும் என தென் கொரியா கூறி உள்ளது.