கொரியா அதிபர்கள் திடீர் சந்திப்பு

--

சியோல்:

வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் மற்றும் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் இன்று தென்கொரியா அதிபர் மூன் ஜே-வை ரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளார்.

கடந்த பேச்சுவார்த்தை நடந்த இடத்திலேயே இன்றும் சந்திப்பு நடந்துள்ளது. 2 பேரும் 2 மணி நேரம் வரை ஆலோசனை நடத்தியுள்ளனர். இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் நாளை வெளியாகும் என்று அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.