சென்னை:

மிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், தேவையான முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆய்வு செய்ய  ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு மட்டும் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை கொண்டு அமைக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், நேற்றே  வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதைத்தொடர்ந்து, பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, தமிழ்நாடு அரசு, பல்வேறு முன்னெச்செரிக்கை ஏற்பாடுகளை எடுத்து வருகிறது.

இதைத்தொடர்ந்து மாவட்டங்கள் வாரியாக முன்எச்சரிக்கை நடவடிக்கைகள், மழை வெள்ளம் போன்றவற்றால் பொதுமக்கள் பாதிப்பு அடையாதவாறு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யவும், கண்காணிக்கவும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 11 பேரை தமிழ்நாடு அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு ஹர்மிந்தர் சிங், கடலூருக்கு ககன் தீப் சிங் பேடி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பீலா ராஜேஷ், புதுக்கோட்டைக்கு சாம்பு கல்லோலிகர் என ஒவ்வொரு மாவட்டத்திலும், அந்தந்த மாவட்ட ஆட்சியருடன் இந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதி அங்கு மட்டும், 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.