வட கொரியா : போரில் இறந்த அமெரிக்க வீரரகள் உடலை தேட அனுமதி

வாஷிங்டன்

டந்த 1950-53 ஆம் வருடம் நடந்த போரில் மரணமடைந்த வீரர்களின் உடலை தேட அமெரிக்காவுக்கு வட கொரியா அனுமதி அளித்துள்ளது.

வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இருந்த அணு ஆயுத  சர்ச்சைகள் உலகறிந்த ஒன்றாகும்.  அதை ஒட்டி சிங்கப்பூரில் வட கொரிய அதிபரும் அமெரிக்க அதிபரும் சந்தித்து கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டனர்.    இதை வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக அனைத்து நாடுகளும் புகழ்ந்தன.

கடந்த 1950 -53 ஆம் வருடம் நடந்த போரில் பல அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.   அவர்களின் உடல்கள் கொரியாவில் புதைக்கப்பட்டுள்ளன.   இது குறித்து டிரம்ப் ஏற்கனவே 200 அமெரிக்க வீரர்களின் உடல்கள் திரும்ப அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.  தற்போது அமெரிக்க அதிகாரி கெல்லி மெக்கீஜ்  ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஏற்கனவே 200 வீரர்களின் உடல்கள் அடங்கிய பெட்டிகளை கொரியா அளித்துள்ளது.   ஆனால் மேலும் பல வீரர்கள் இவ்வாறு அடையாளம் தெரியாமல் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.   அதை ஒட்டி நடந்த பேச்சு வார்த்தையில் இந்த உடல்களை தேட அமெரிக்காவுக்கு வட கொரியா அனுமதி அளித்துள்ளது.

இவ்வாறு உடல்கள் புதைக்கப்பட்ட இடங்கள் குறித்து கண்டறிந்து விரைவில் வட கொரியா அமெரிககாவுக்கு தெரிவிக்க உள்ளது.   அதன் பிறகு இந்த உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு மரபணு பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

போர் முடிந்து வருடங்கள் மிகவும் ஆகிவிட்ட படியால் தற்போது எலும்புகள் கூட கிடைப்பது கடினம் என கூறப்படுகிறது.   அதானால் அனைத்து உடல்களையும் அடையாளம் காண்பது மிகவும் கடினமாக இருக்கும். ” என தெரிவித்துள்ளார்.