வடகொரியாவில் கொரோனா நோயாளிகளுக்கு ரகசிய பட்டினி முகாம்கள்…. அதிர்ச்சி தகவல்

டகொரியாவில் கொரோனா தொற்றே இல்லை என்று அதிபர்  கிம் ஜாங்  கூறி வரும் நிலையில், அங்கு கொரோனா நோயாளிகளுக்கு என ரகசிய முகாம்கள்  செயல்பட்டு வருவதாகவும், அங்கு அடைக்கப்படும் நோயாளிகள் பட்டினியால் இறந்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளை புரட்டிப்போட்டுள்ளது கொரோனா வைரஸ்.   லட்சக்கணக்கானோரை பலிகொண்டுள்ள இந்த வைரஸ் பரவலை தடுக்க மருந்து கண்டுபிடிக்கும் பணியில்  உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால், சர்ச்சைக்கும், மர்மங்களுக்கும் பெயர்போன வடகொரியாவில் ஒருவருக்குக்கூட கொரோனா   பாதிப்பு ஏற்படவில்லை என அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் கூறி வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரும் திடீரென மாயமான நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் பரவின. ஆனால் சமீபத்தில், வெளியே வந்த கிம்,  அங்கு நடைபெற்ற வடகொரிய தொழிலாளர் கட்சியின் 75-வது ஆண்டு விழாவில் பங்கேற்று அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அப்போது,  நாட்டில் கொரோனா பெருந்தொற்றை அண்டவிடாமல் காத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

இந்த நிலையில், தற்போது வடகொரியாவில் இருந்து வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அங்கு கொரோனா நோயாளிகளுக்கு என ரகசிய முகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கு நோயாளிகள் அடைத்து வைக்கப்பட்டு வருவதாகவும்,  நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படாமல்,  கொடுமைப்படுத்தப்படுவதாகவும்,  உணவின்றி அவதிப்படுவதாகவும்,  அங்குள்ள நிலைமை மிகவும் மோசமாகவும் கவலைக்கிடமாகவும் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வடகொரியாவில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை அதிபர் கிம் ஜாங் உ கூறிவரும் நிலையில், அங்கிருந்து வெளிவரும் தகவல்கள் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளன.