வட கொரிய ஏவுகனை சோதனை மையங்கள் அழிப்பு

பியாங்யாங்

னது ஏவுகணை சோதனை மையங்களை வட கொரியா அழித்துவருகிறது.

வடகொரியா தனது அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளால் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் வழங்கி வந்தது.    இதனால் உலகெங்கும் பதட்டம் உண்டாகியது.   அதன் பிறகு தென் கொரியா மற்றும் வட கொரியா பேச்சு வார்த்தகள் நடந்தது.

சிங்கப்பூரில் கடந்த ஜூன் 12ஆம் தேதி சரித்திரப் புகழ்பெற்ற அமெரிக்க அதிபர் மற்றும் தென் கொரிய அதிபரின் சந்திப்பு நிகழ்ந்தது.   அந்த சந்திப்பில் வட கொரிய அதிபர் கிம்  தனது ஏவுகணை சோதனைகளை கைவிடுவதாக உறுதி அளித்தார்.   அத்துடன் அணு ஆயுதங்களும் அழிக்கப்படும் என தெரிவித்தார்.

இவ்வாறு நடைபெற்றால் அமெரிக்கா தாம் விதித்த பொருளாதார தடையை முழுவதுமாக விலக்கிக் கொள்ளும் என உறுதி அளித்தது.    அதை ஒட்டி வட கொரியா தனது ஏவுகணை சோதனை மையங்களை அழிக்கும் பணியை தொடங்கி  உள்ளது.   வட கொரியா தனது ஏவுகணை சோதனை மையங்களை அழிக்கும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.