னி சூழ்ந்த மலைப்பகுதியில் வடகொரிய அதிபர் திடீரென, தனது குடும்பத்தின் அடையாளமான வெள்ளைக் குதிரையில் சவாரி செய்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கொரிய தீபகற்பத்தின் மிக உயர்ந்த சிகரமான பனி மூடிய  பைக்டு மலையில், வடகொரிய அதிபர் கிம், தனது வெள்ளைக் குதிரையில் ஒய்யாரமாக அமர்ந்த படி, சவாரி செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர்.   அடர்ந்த பனிகளுக்கு இடையேயும், மரங்களுக்கு இடையேயும் கிம் குதிரையில் அமர்ந்தபடி பயணம் ஸ்டைலாக பயணம் மேற்கொண்டார்.

அந்த புகைப்படங்களில்  கிம் நீளமான, வெளிர்-பழுப்பு நிற கோட் அணிந்து, பனியால் மூடப்பட்ட பைக்டு மலையை குதிரையில் சவாரி செய்வதைக் காட்டுகின்றன. கொரிய தீபகற்பத்தின் மிக உயரமான இடமான இந்த மலை வட கொரியர்களுக்கு புனிதமானது, அதுவும் வெள்ளை குதிரையும் இரண்டும் கிம் குடும்பத்தின் வம்ச ஆட்சியுடன் தொடர்புடைய அடையாளங்கள்.

கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக அமெரிக்கா உடனான வடகொரியாவின் முதல் அணுசக்தி பேச்சுவார்த்தைகள் துண்டிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, இந்த படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது..

கிம் இதற்கு முன்னர் தனது சக்திவாய்ந்த மாமாவை 2013ம் ஆண்டு தூக்கிலிட்டபோதும், கடந்த, 2018ம் ஆண்டு தென் கொரியா மற்றும் யு.எஸ். உடனான பேச்சு வார்த்தைக்கு முன்பாகவும், இது போன்ற வெள்ளைக்குதிரை சவாரி செய்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது கிம் வெள்ளைக்குதிரையில் சவாரி செய்திருப்பது,  ஒரு சக்தி வாய்ந்த செயலை  சித்தரிப்பதாக உள்ளதாகவும்,  இந்த பயணம் வடகொரிய புரட்சியில் முன்னேற்ற மடைய வழிவகுக்கும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

கிம் தனது முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு பைக்டு மலைக்கு பயணம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த ஏழு தசாப்தங்களாக வடகொரியாவை ஆண்ட கிம் குடும்பத்தின் பிரச்சார அடையாளமாக வெள்ளை குதிரை உள்ளது குறிப்பிடத்தக்கது.