சியோல்:

குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு விழாவில் கலந்து கொள்ள வட கொரியாவின் உயர் மட்ட குழு உறுப்பினர்கள் தென்கொரியாவுக்கு செல்கின்றனர். அங்கு தென்காரியாவின் அதிபர் அலுவலகத்தில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று வடகொரியா அறிவித்துள்ளது.

ஒலிம்பிக் போட்டியின் போது தென்கொரியா அதிபர் மூன் ஜேஇ.யுடன் வடகொரியா பிரதிநிதிகள் சந்தித்து பேசியுள்ளனர். இது இரண்டு கொரியா நாடுகளுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட வாய்ப்பாக அமைந்துள்ளது என்று வட கொரியா பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தென் கொரியா அதிபர் அலுவலகத்தில் அமெரிக்காவுடனும் பேச்சு வார்த்தை நடத்த தயாராகவுள்ளோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் வடகொரியா & அமெரிக்கா இடையிலான பதற்றம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.