டகொரியா உலக நாடுகளை மிரட்டும் வகையில் 6வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தி உள்ளது. இதன் காரணமாக ஐ.நா. சபையின் அவசர கூட்டம் இன்று கூடுகிறது.

இந்த கூட்டத்தில் வடகொரியா மீது எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டு  சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் தொடர் ஏவுகணை மற்றும் அணுகுண்டுச் சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டுவருகிறது.

முன்னதாக, அமெரிக்காவின் போர் மிரட்டல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், கடந்த ஏப்ரல் மாதம் வட கொரியா ராணுவ அணிவகுப்பு நடத்தியது. இதன் காரணமாக வடகொரியா வுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.

சர்வதேச நாடுகள் மற்றும் ஐநா சபையின் எதிர்ப்பையும் மீறி, அணு ஆயுதச் சோதனைகளை நடத்திவருகிற.

ஏற்ககனவே வடகொரியா மீது அந்த நாட்டின் மீது, ஐ.நா. சபை பொருளாதாரத் தடை விதித்துள்ள போதும், அதை வட கொரியா பொருட்படுத்தமல் மீண்டும் மீண்டும் ஏவுகனை சோதனை நடத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று 6வது முறையாக ஹைட்ரஜன் அணுகுண்டை சோதனை செய்தது. வட கொரியாவின் இந்த அடாவடி செயல் காரணமாக  உலகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க் கூறும்போது, ‘வட கொரியா சர்வதேச சட்டங்களை மீறி அணு ஆயுதச் சோதனைகள் நடத்தி வருகிறது. இந்த  விஷயங்களுக்கு எல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டிய சூழலில் உள்ளோம். அனைத்து வித அணு ஆயுதச் சோதனை களை வட கொரியா நிறுத்துவதில் இனியும் காலம் கடத்தமாட்டோம் என்றும் தெரிவித்து உள்ளார்.

இதன் காரணமாக மீண்டும் போர் பதற்றம் நிலவி வருகிறது.