பியாங்யாங்: உலகமே கொரோனா அச்சுறுத்தலால் நிலைகுலைந்து நின்றாலும், தன் வழி தனி வழி என்ற வகையில், ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது வடகொரியா.

பிப்ரவரி 29ம் தேதியான இன்று, தனது கிழக்கு கடற்கரையில் 2 ஏவுகணைகளை ஏவி சோதித்துள்ளது வடகொரியா. வடகொரியாவின் இந்த செயலை, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் கண்டித்துள்ளன.

தென்கொரியா தரப்பில் கூறப்படுவதாவது, “வடகொரியாவின் வோன்சான் கடற்கரையிலிருந்து குறுகிய தொலைவு சென்று தாக்கும் இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டன. இந்த ஏவுகணைகள் 230 கி.மீ தொலைவுக்கு 30 கி.மீ உயரத்தில் சென்றன. உலக நாடுகள், கோவிட்-19 வைரஸால் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் சூழலில், வடகொரியாவின் இந்த நடவடிக்கை முற்றிலும் பொருத்தமற்றதாக உள்ளது” என்றுள்ளது.

ஜப்பான் தரப்பிலோ, “வடகொரிய ஏவுகணை, தங்கள் பகுதியில் விழவில்லை என்றுள்ள ஜப்பான், அந்நாட்டின் செயல் சர்வதேச சமூகத்திற்கு அச்சுறுத்தல்” என தெரிவித்துள்ளது.