அமெரிக்கா மிரட்டி எங்களை பணிய வைக்க முடியாது : வட கொரியா அதிரடி

சியோல், வட கொரியா

மெரிக்காவின் மிரட்டலால் வட கொரியா அணு ஆயுத சோதனையை கைவிடாது என தெரிவித்துள்ளது.

வட கொரிய நாட்டு ராணுவம் செய்து வரும் ஏவுகணைச் சோதனைகளை அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது தெரிந்ததே.   வட கொரியாவுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.   பல விதங்களிலும் அமெரிக்கா வட கொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது

இந்நிலையில் வட கொரிய அரசு, “அமெரிக்கா மிரட்டலின் மூலம் எங்களை பணிய வைக்க முயலுகிறது.   ஆனால் அது அமெரிக்காவால் முடியாது.   இதனால்  நாங்கள் ஆணு ஆயுத சோதனைகள் செய்வதை கை விட மாட்டோம்” என தெரிவித்துள்ளது.