பியோங்யங்:
வட கொரியா மக்கள் வறுமையில் வாடி கொண்டிருக்கும் நிலையில் தனது உல்லாசத்துக்கு அந்நாட்டு சர்வாதிகாரி கோடிக்கணக்கான பணத்தை செலவிட்டு வருகிறார்.

சர்வதேச அளவில் சர்வாதிகாரியாக சித்திரிக்கப்படும் வட கொரியா அதிபரான கிம் யோங் அன் தன்னுடைய தனிப்பட்ட உல்லாசத்திற்காக பணத்தை செலவிட்டு வருகிறார். இதில் குறிப்பாக, அதிபரை உற்சாகப்படுத்த 13 வயது நிரம்பிய சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கற்பு பரிசோதனை ‘‘மகிழ்ச்சி அணியில்’’ பாலியல் அடிமைகளாக சேர்க்கப்படுமவார்கள். அதிபர் விரும்பும்போது அவரை அவர்கள் உற்சாகப்படுத்த வேண்டும்.

கடந்த ஒரு ஆண்டில் இந்த சிறுமிகள் அணிய சுமார் 2.7 மில்லியன் பவுண்டு அதாவது ரூ.22 கோடி செலவில் உள்ளாடைகளை சீனாவில் இருந்து வரவழைத்துள்ளார்.அதோடு, ஜெர்மன் நாட்டில் இருந்து சாம்பெய்ன் மது மற்றும் பீர்களை இறக்குமதி செய்தும், பல ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்து உல்லாசமாக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். நாட்டு மக்களை பற்றி கவலைப்படாமல் வட கொரியா அதிபர் தனது மூதாதையர்களின் சிலைகளை 33 மில்லியன் பவுண்ட் செலவில் நாடு முழுவதும் நிறுவி வருகிறார்.

வட கொரியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் இருப்பதாக ஐ.நா குற்றம் சாட்டியுள்ளது. இதை பற்றி கவலைப்படாமல் அதிபரின் உல்லாச வாழ்க்கை கடும் கண்டனத்திற்க ஆளாகி வருகிறது.