சியோல்

ட கொரிய ராணுவத்தினரால் மரண தண்டனை அளிக்கப்பட்டதாக சொல்லபட்ட அதிகாரி கிம் ஹியுக் சோல் உயிருடன் உள்ளதாக தென் கொரிய பத்திரிகை தெரிவித்துள்ளது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே இந்த வருடம் பிப்ரவரி மாதம் வியட்நாம் தலைநகர் ஹனோயியில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.    அந்த பேச்சுவார்த்தைக்கு தூதராக வட கொரிய ராணுவ அதிகாரி கிம் ஹியுக் சோல் பணி புரிந்தார்.   இந்த பேச்சு வார்த்தையின் போது வட கொரிய அதிபர் விடுத்த கோரிக்கைகளுக்கு டிரம்ப் ஒப்புக் கொள்ளாததால் பேச்சு வார்த்தை இடையில் முறிந்தது.

அந்த முறிவுக்கு பிறகு கிம் ஹ்யுக் சோல் பல தினங்களாக வெளியுலகத்துக்கு தெரியாமல் இருந்தார்.  இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வந்த தகவலின்படி அவருக்கு வட கொரிய ராணுவம் மரண தண்டனை நிறைவேற்றி உள்ளதாக கூறப்பட்டது.   பேச்சு வார்த்தையின் போது அவர் வட கொரியாவுக்கு எதிராக இருந்ததால் இந்த தண்டனை அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் தென் கொரிய பத்திரிகை நேற்று அளித்த செய்தியில், “தென் கொரிய அதிபர் அவர் மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் கலந்துக் கொண்ட நிகழ்வு ஒன்றில் கிம் ஹ்யுக் சோல் காணப்பட்டார்.   ராணுவ அதிகாரிகளின் மனைவிகள் இணைந்து நடத்திய இந்த கலை நிகழ்வில் கிம் ஹ்யுக் சோல் கலந்துக் கொண்டுள்ளார்” என செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த பத்திரிகை செய்தியில் கிம் ஜாங் உன் உடன் முகத்தை மூடியபடி அமர்ந்துள்ள ஒரு நபரின் புகைப்படத்தை காட்டி அவரை கிம் ஹியுங் சோல் என கூறி உள்ளது.   அந்த புகைப்படத்தில் உள்ளவரின் முகம் தெளிவாக இல்லை எனவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே பல முறை வட கொரியா குறித்த தென் கொரியாவின் பத்திரிகை செய்திகள் தவறாகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.