பையோங்யாங்க்:

வடகொரியாவை சேர்ந்த அணுவிஞ்ஞானி, சீனாவுக்கு தப்பியோட முயன்றபோது வடகொரிய பாதுகாப்பு படையினரிடம் சிச்கினார்.

இதன் காரணாக அவர் விஷம் உண்டு  தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து நியூயார் போஸ்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், வடகொரிய அறிவியல் அகடாமி மையத்தில் அணு ஆராய்ச்சி பிரிவில் வேலை செய்து வந்த, 50 வயதான  ஹூ ஹையூன் சையோல் என்பவர் தனக்கு கொடுக்கப்பட்டிருந்த விடுமுறை காலத்தின்போது, நாட்டைவிட்டு வெளியேற முயற்சி செய்துள்ளார்.

அதைத்தொடர்ந்து, கடந்த நவம்பர் மாதம் வடகொரிய-சீன சர்வதேச எல்லை வழியாக சீனாவுக்கு ஊடுருவ முயன்றபோது சீன பாதுகாப்புபடையினரால் கைது செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து சீன படையினர் அவரை, சீனாவுக்குள் அனுமதிக்க மறுத்து வடகொரிய சர்வதேச எல்லையில் அவரை கொண்டு விட்டனர்.  அவரை கைது செய்த வடகொரிய பாதுகாப்பு படை அவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக, அந்த அணு விஞ்ஞானி தான் தயாராக வைத்திருந்த விஷத்தை உண்டு அன்றே தற்கொலை செய்துகொண்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல் ஒரு மாதத்திற்கு பிறகு தற்போதே வெளியாகி உள்ளது.