ஆகஸ்ட் 20-26: போரினால் பிரிந்த வடகொரியா, தென்கொரிய மக்கள் இணைய வாய்ப்பு!

சியோல்:

கொரியப் போரில் பிரிந்த குடும்பங்கள்  ஆகஸ்ட் 20ந்தேதி முதல்  26ந்தேதி வரை இணைய வாய்ப்பு அளிக்கப்படுவதாக இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்திலான  பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சு பிரதிநிதிகளின் கூட்டு அறிக்கை இதை தெரிவித்து உள்ளது.

வடகொரியா, தென் கொரியா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வந்த போரால் பிரிந்த குடும்பங்களை மீண்டும் இணைப்பது குறித்து  வடகொரியா – தென்கொரியா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின்போது செஞ்சிலுவை சங்கத்தினரும் கலந்துகொண்டனர்.

எலியும் பூனையுமாக சுமார் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக உறுமிக்கொண்டிருந்த வடகொரியா, தென்கொரியா இடையே தற்போது சமூகமான  நிலை தொடர்ந்து வருகிறது.

தென் கொரியாவின் பியாங் நகரில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில்  வடகொரியா அரசு தனது வீரர்கள், வீராங்கனைகளை அனுப்பி வைத்தது. இதன் காரணமாக இ இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் தணிந்து, இரு நாடுகளுக்கு இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது.

அதையடுத்து கடந்த மார்ச் மாதம்  இருநாட்டு தலைவர்கள் சந்தித்து பேசினார். அவர்களுக்குள் ஏற்பட்ட   சுமூக உடன்பாடு  காரணமாக  பல ஆண்டுகளான  நீடித்து வந்த பிரச்னை முடிவுக்கு வந்தது.  பின்னர் தென்கொரிய அதிபரின் முயற்சியில் காரணமாக வடகொரிய அதிபர், அமெரிக்க அதிபர் இடையே வரலாற்று சிறப்புமிக்க  சந்திப்பு நடைபெற்றது.

இந்த நிலையில், ஏற்கனவே நடைபெற்ற போரின் காரணமாக. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பங்களை விட்டு பிரிந்தனர். பலர் தங்கள் குடும்பத்தினரை பார்க்காமலேயே மரணத்தை யும் தழுவினர். தற்போது இரு நாடுகளுக்கும் இடையே சுமூகமான சூழ்நிலை நீடித்து வருவதால், பிரிந்த இரு நாட்டு மக்களையும் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரு நாட்டு பொதுமக்களும் அரசுகளுக்கு கோரிக்கை வைத்தனர்.

அதை தொடர்ந்து இரு கொரிய நாடுகளின் பிரநிதிகள் இடையே வடகொரியாவின் மவுண்ட் கும்காங் ரிசார்ட்டில்  பேச்சுவார்த்தை நடைபெற்றது. தென்கொரியா சார்பில் பார்க் க்யுங் சியோ தலைமையிலான குழுவும் வடகொரியாவின் இரண்டாம் பாக் யோங் தலைமையிலான பிரநிதிகள் குழுவும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டன.

இதில் வட கொரிய மற்றும் தென் கொரியாவின் பிரதிநிதிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி ஆகஸ்டு மாதம்  20ந்தேதி முதல் 26ந்தேதி வரைபோரினால் பிபிரிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மறு ஒழுங்கு செய்யப்பட வாய்ப்பு அளிப்பதாக கூறப்பட்டுள்ளது.