தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வெதா்மேன்

சென்னை:

வெப்பச்சலனம் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று  மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக  தமிழ்நாடு வெதா்மேன் தொிவித்துள்ளாா்.

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா மற்றும் மேற்குதொடர்ச்சி மழை பகுதிகளில் இந்த ஆண்டு கோர தாண்டவம் ஆடிய மழை தற்போது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவ்வப்போது பெய்து வந்த மழை சமீப காலமாக கடும் வெயில் வாட்டி வருகிறது.

இந்த நிலையில்,  வெப்பச்சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தொிவித்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், கடலூா், வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம், டெல்டா மாவட்டங்களான திருச்சி, பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா், நாகை, திருவாரூா் மற்றும் சிவகங்கை, புதுக்கோட்டை ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கேரளாவில் பருவமழை தற்போது ஓரளவு ஓய்ந்திருக்கும் நிலையில் தமிழகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. பருவமழையால் பெரிய அளவில் மழை கிடைக்காத தமிழகத்தின் உள் மாவட்டங்களும் கூட இந்த பருவ மழை காலத்தில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு வெதர்மேன் தெரிவித்து உள்ளார்.