கலிபோர்னியா காட்டு தீயில் சிக்கி 2 பேரக்குழந்தைகளுடன் மூதாட்டி பலி

வாஷிங்டன்:

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் ரெட்டிங் பகுதியில் கடந்த 26-ம் தேதி பயங்கரமான காட்டுத் தீ ஏற்பட்டது.

காற்றின் வேகம் காரணமாக தீ அடுத்தடுத்த பகுதிகளுக்கும் பரவியது. அங்கு வசித்த மக்கள் வீடு, வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். காட்டு தீ ஏற்பட்ட பகுதியில் கடந்த 3 நாட்களாக மீட்பு பணி நடந்து வருகிறது.

இதில் 2 தீயணைப்பு வீரர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். தீயில் சிக்கிய வீடு ஒன்றில் மூதாட்டி, 2 பேரக்குழந்தைகளில் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டது. இதன் மூலம் காட்டுத் தீயில் பலியானவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.